ஆசியா

மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி- ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

  • January 19, 2024
  • 0 Comments

இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் லட்சத்தீவு சென்றிருந்தார். லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவையும், பிரதமர் மோடியையும், இந்தியர்களையும் விமர்சித்து மாலத்தீவு மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மாலத்தீவு இந்திய சுற்றுலா பயணிகளின் இந்த நடவடிக்கையால் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, […]

இலங்கை

புத்தளம் – ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் மீன்படி இயந்திரங்கள் தீவைத்து எரிப்பு

  • January 19, 2024
  • 0 Comments

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் என்பனவற்றுக்கு இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளும், ஒரு பெரிய வள்ளம் என்பன முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரண்டு வள்ளம் பகுதியளவிலும் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், நான்கு மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட மீன்பிடி இயந்திரப் […]

இலங்கை

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

  • January 19, 2024
  • 0 Comments

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. குளத்தின் கீழுள்ள தாழ் நிலப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆசியா

பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!

  • January 19, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானின் பிரதமர் இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் நிதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு குழு […]

பொழுதுபோக்கு

அடேங்கப்பா… என்ன ஒரு கோல்! போட்டது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

  • January 19, 2024
  • 0 Comments

இதுவரை மனிதர்கள் விளையாடி பார்த்து இருக்கின்றோம். ஆனால் தற்போது மனிதர்களைத் தாண்டி விலங்குகளும் விளையாடத் தொடங்கிவிட்டன. கடல்வாழ் உயிரினங்களாகட்டும், தரைவாழ் உயிரினங்களாகட்டும், பறவைகள், ஊர்வன என்று எல்லாம் மனிதர்களைப்போலவே விளையாடுவதை கண்டுள்ளோம். ஆனால் போட்டியில் வெற்றி பெற்றால் சந்தோஷமடைவதையும், துள்ளி குதிப்பதையும் விலங்குகள் செய்வதை காண்பது அறிது. ஆனால் இங்கு மரை ஒன்று விளையாடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். குறித்த மரை தனது கொம்பால் பந்தை உருட்டிக்கொண்டு சென்று, கோல் அடித்து விட்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதை பார்க்காலம்.. https://twitter.com/AMAZlNGNATURE/status/1747774572013732308

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 963 பேர் கைது!

  • January 19, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் இன்று (19.01) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 963 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 638 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 325 சந்தேக நபர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 10 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகவும்,  போதைக்கு அடிமையான 08 பேர் […]

ஆசியா

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! நீருக்கடியில் அணுவாயுத சோதனை செய்த வடகொரியா!

  • January 19, 2024
  • 0 Comments

தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் பயிற்சிக்கு வடகொரியா நிச்சயமாக எதிர்வினையாற்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றவகையில் வடகொரியாவும் பால்ஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. “ஹெய்ல்-5-23” எனப் பெயரிடப்பட்ட நீருக்கடியில் சோதனைசெய்ய பயன்படும் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் கிழக்குக் கடலில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம், தென்கொரியா, […]

பொழுதுபோக்கு

சுற்றி சுற்றி வந்த சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாரா

  • January 19, 2024
  • 0 Comments

நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. Spread Positivity 👍God Bless😇 pic.twitter.com/vFj6JHdzGp […]

உலகம்

மேலும் அதிகமானோரை நீக்க தயாராகும் Google

  • January 19, 2024
  • 0 Comments

Google நிறுவனத்தல் மேலும் அதிகமானோர் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என  தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி சில பகுதிகளில் வேகத்தைக் கூட்ட இந்த ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் திரு பிச்சை கூறினார். ஆனால் அது சென்ற ஆண்டு (2023) செய்யப்பட்ட பணிநீக்கத்தின் அளவைப்போல் இருக்காது என பிச்சை குறிப்பிட்டுள்ளார். பணிநீக்கத்தால் அனைத்துக் குழுக்களும் பாதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். Google நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை  செய்தி […]

உலகம்

அமெரிக்காவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய பனிப்புயல் : 43 பேர் பலி!

  • January 19, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பனிப்புயல் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான மாநிலங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தின் மிக மோசமான குளிர் காலநிலையை நாடு எதிர்கொள்வதால், வரும் நாட்களில் மோசமான வானிலையே நிலவக்கூடும் என அந்நாட்டு வானிலை சேவை தெரிவித்துள்ளது. ஒன்பது மாநிலங்களில் புயல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 43 ஆக அதிகரித்துள்ளதாக சிஎன்என் செய்தி சேவை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாழ்வெப்பநிலை, கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியமை மற்றும் கார் விபத்துக்கள் […]