புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ராஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தம்? மௌனம் கலைத்தார் விஜய்

  • January 19, 2024
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தன்னா இருவரும் நிச்சயதார்த்தம் செய்ததாக சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்வரும் பெப்ரவரியில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று வதந்தி பரவியது. விஜய் தேவரகொண்டா, லைஃப்ஸ்டைல் ஆசியா உடனான சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது தொடர்பான உண்மையை தெரிவித்துள்ளார். இந்த ஜோடி நிச்சயதார்த்தத்துடன் தங்கள் உறவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லைஃப்ஸ்டைல் ஆசியா உடனான சமீபத்திய நேர்காணலில், “பெப்ரவரியில் எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ […]

இலங்கை

திருகோணமலையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!

  • January 19, 2024
  • 0 Comments

திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது இன்று (19) இடம்பெற்றுள்ளது. 13 வதுடைய சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் மாமன் முறையான 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை […]

உலகம்

நடுவானில் எரிந்தபடி பறந்த விமானம்: வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்து விபத்துக்குக்காகியுள்ளது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் 95 புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த விமானம் பியூர்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவான் நகருக்கு […]

ஐரோப்பா

போரில் பங்கேற்க கப்பெரிய பயிற்சியை தொடங்கும் நேட்டோ

பனிப்போருக்குப் பிறகு நேட்டோ தனது மிகப்பெரிய பயிற்சியை அடுத்த வாரம் தொடங்கும், சுமார் 90,000 பணியாளர்கள் பல மாதங்கள் நீடிக்கும் போரில் பங்கேற்க உள்ளனர் என்று கூட்டணியின் உயர்மட்ட தளபதி ஜெனரல் கிறிஸ் கவோலி தெரிவித்துள்ளார். பயிற்சிகள் நேட்டோவின் பிராந்திய திட்டங்களை செயல்படுத்த ஒத்திகை பார்க்கப்படும் என்று கூறியுள்ளார். இது பல தசாப்தங்களில் கூட்டணி வரைந்த முதல் பாதுகாப்புத் திட்டமாகும், நேட்டோ தனது அறிவிப்பில் ரஷ்யாவின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அதன் உயர்மட்ட மூலோபாய ஆவணம் மாஸ்கோவை […]

பொழுதுபோக்கு

டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் முதல் சர்ப்ரைஸ் video

  • January 19, 2024
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் ஜெயித்த முதல் நபர் அர்ச்சனா தான். பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் ரூ.15 லட்சம் மதிப்பிலான வீடும், சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த பின்னரும் அர்ச்சனாவை பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அவர் காசு கொடுத்து தான் டைட்டில் வாங்கியதாக விமர்சனங்கள் […]

இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜனவரி 19) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 92 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 07 சதமாக காணப்பட்டது. அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபாய் 06 சதமாக பதிவாகியுள்ளது. […]

ஆசியா

செங்கடலில் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களுக்கு பாதுகாப்பு : ஹவுதிகள் உறுதி

செங்கடல் வழியாக ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதாக மூத்த ஹூதி அதிகாரி உறுதியளித்துள்ளார். ரஷ்யா மற்றும் சீனா உட்பட மற்ற அனைத்து நாடுகளையும் பொறுத்தவரை, பிராந்தியத்தில் அவர்களின் கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தப்படவில்லை. மேலும், செங்கடலில் அவர்களின் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய நாங்கள் தயாராக உள்ளோம், மேலும் இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்த வகையிலும்” கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

போதை கடத்தல் வியாபாரியுடன் தொடர்பு? கணவரை பிரிகிறாரா நமீதா? பயில்வான் ஷாக்

  • January 19, 2024
  • 0 Comments

நடிகை நமீதா காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை நமீதா 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், நடிகை நமீதா குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை நமீதா விவாகரத்து செய்ய உள்ளதாக வீடியோ ஒன்றில் […]

இலங்கை

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து ஐ.எம்.எஃப் அதிருப்தி!

  • January 19, 2024
  • 0 Comments

இலங்கை பொருளாதாரத்தின் மீட்சி குறைந்த மட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் நன்மைகள் கிடைக்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர்  பீட்டர் ப்ரூவர் கூறுகிறார். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் இலக்குகளை அடைய சொத்து வரி பெரும் உறுதுணையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மீனவரின் சடலம்

  • January 19, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள, இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரையொதுங்கி உள்ளது தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் சடலம் கரையொதுங்கி இருக்கின்றது இதில் உள்ள கேன்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது .