ஆசியா

ஈரான் அமெரிக்காவுடன் போரை நாடவில்லை: ராணுவ தளபதி எச்சரிக்கை

அமெரிக்கா போருக்கு வலிந்து அழைத்தால் அதற்கு நாம் பயப்பட மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். போரை முன்னெடுப்பதில் நாம் ஆர்வம் காட்டவில்லை. எனினும் “ஈரானை குறிவைப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து சில அச்சுறுத்தல்கள் வருகிறது. நாங்கள் எந்த அச்சுறுத்தலையும் பதிலளிக்காமல் விடுவதில்லை, இது அனைவரும் அறிந்த உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் ஆதவுடன் செயற்படும் ஹௌத்தி கிளர்ச்சி படை, அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் கப்பல் […]

பொழுதுபோக்கு

காதல் கணவனை பிரிந்த ராஜ்கிரண் வளர்ப்பு மகள்… கண்ணீருடன் வெளியிட்ட செய்தி

  • February 1, 2024
  • 0 Comments

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். தற்போது ராஜ்கிரணின் மகள் பிரியா எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய […]

இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு : தனியார் பேருந்து சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

  • February 1, 2024
  • 0 Comments

தொடர் டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கங்கள் கூறுகின்றன. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்னதாக ஒரு லிட்டர் டீசல் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. அது நிற்காமல் நேற்று மீண்டும் 5 ரூபாய் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் […]

ஆசியா

வாகன ஏற்றுமதியில் முன்னணி நாட்டை பின் தள்ளிய சீனா!

  • February 1, 2024
  • 0 Comments

வாகன ஏற்றுமதியில் உலகின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக இருந்த ஜப்பானின் இடத்தை கடந்த வருடம் சீனா பிடித்துள்ளது. இது தொர்பில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் ஜப்பான் 4.42 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16% அதிகமாகும், அதே சமயம் உள்நாட்டு வாகன விற்பனை மொத்தம் 4.78 மில்லியனாக பதிவாகியுள்ளது. சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த […]

ஆசியா

ஈரானில் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை அந்நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை!

  • February 1, 2024
  • 0 Comments

கடந்த வாரம் ஈரானில் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட ஒன்பது பாகிஸ்தானிய தொழிலாளர்களின் உடல்கள் இன்று (01.02) அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பில் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தாக்குதலில் காயமடைந்த மூன்று பாகிஸ்தானியர்கள் ஈரானிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் முல்தான் நகருக்கு கொண்டு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் விமான பயணங்களை திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவித்தல்!

  • February 1, 2024
  • 0 Comments

ஜேர்மனியில் விமான  நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று (01.02) வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுது்து ஊதிய பிரச்சினை குறித்த அழுத்தத்தை அதிகரித்துள்ளனர். ver.di தொழிற்சங்கம், Frankfurt, Berlin, Cologne, Duesseldorf, Hamburg, Stuttgart, Leipzig, Hannover, Dresden, Bremen மற்றும் Erfurt ஆகிய 11 விமான நிலையங்களில் வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. பெர்லின், ஹாம்பர்க் மற்றும் ஸ்டட்கார்ட்டில் இருந்து அன்றைய நாளுக்கான அனைத்து புறப்பாடுகளும் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டன. […]

இலங்கை

இலங்கையில் இன்று முதல் மற்றுமோர் சேவை கட்டணம் அதிகரிப்பு!

  • February 1, 2024
  • 0 Comments

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பொதிகளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபொல தெரிவித்தார்.

இலங்கை

மருத்துவமனை பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!

  • February 1, 2024
  • 0 Comments

மருத்துவமனைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01.02) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மேற்பார்வையில், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்-லொரி ; பரிதாபகரமாக 19 பேர் பலி!

  • February 1, 2024
  • 0 Comments

மெக்சிகோவில், சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது களைப்படைந்த ஓட்டுநர் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவதும் அந்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மெக்சிகோவின் வடமேற்கே கடந்த செவ்வாய் கிழமை சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் மற்றும் லொரி மோதி கொண்டதில், 19 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் காயமடைந்தனர். அந்த பஸ் ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா மாகாணத்தின் லாஸ் […]

பொழுதுபோக்கு

சிம்பு ரசிகர்களுக்கு ராஜ்கமல் கொடுத்த சப்ரைஸ்… இத எதிர்பார்க்கவே இல்லையே…

  • February 1, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]