செங்கடலில் பதற்ற நிலை – தவிக்கும் 16,000 கால்நடைகள்
செங்கடலில் பதற்ற நிலையால் 16,000 கால்நடைகள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படகின்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து 14,000 செம்மறியாடுகளையும் 2,000 மாடுகளையும் ஏற்றிக்கொண்டு செங்கடலில் பயணம் செய்யவிருந்த கப்பலைத் திரும்பி வருமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலை ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சிக்காரர்கள் தாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து கப்பலில் உள்ள கால்நடைகளின் பாதுகாப்புக் கருதி அந்தக் கப்பல் திருப்பி விடப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள கால்நடைகள் நலத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் 40 […]













