ரமழானில் அக்ஸா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – அமெரிக்கா
காஸா-ரம்ஜான் காலத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து முஸ்லிம்கள் அல்-அக்ஸா மசூதிக்கு வழிபாட்டிற்காக செல்வது தடுக்கப்படும் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீடு ஏற்பட்டது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரமலான் மாதத்தில் மக்கள் தொழுகைக்காக அக்சா வளாகத்திற்கு வருவதை தடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலிடம் […]













