செய்தி

பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்படாது

  • March 23, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் இன்று (23) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தைப் பேணுதல் குறித்து […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தோள்கொடுக்க ஈரான் எப்போதும் தயார்!

  • March 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஈரான் தயாராகவே இருக்கின்றது என்று அந்நாட்டு தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பிராந்திய நிகழ்வுகளால் தேவையான எண்ணெயைப் பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டால், ஈரான் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும். ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை, மேலும் நாங்கள் இலங்கைக்கு தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம். […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

உடையும் வால்நட்சத்திரம்: நாசாவின் ஹப்பிள் சாதனை!

  • March 23, 2026
  • 0 Comments

Image credit: NASA, ESA, Dennis Bodewits (AU) நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope), விண்வெளியில் ஒரு வால்நட்சத்திரம் பல துண்டுகளாக உடைந்து சிதறுவதை முதன்முறையாக மிக நெருக்கமாகவும், நேரலையாகவும் படம் பிடித்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நடந்த கண்டுபிடிப்பு என்றும் விஞ்ஞானிகள் உண்மையில் வேறொரு விண்வெளிப் பொருளை ஆய்வு செய்யவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், அவர்களின் கவனம் C/2025 K1 (ATLAS) […]

இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

  • March 23, 2026
  • 0 Comments

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

வட லண்டனில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான வாகனங்கள் தீக்கிரை – அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் கடும் கண்டனம்

  • March 23, 2026
  • 0 Comments

வட லண்டன் பகுதியில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியா யூத எதிர்ப்பை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை வார்த்தைகளிலும் செயல்களிலும் தெளிவுபடுத்த வேண்டும் என கன்சர்வவேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் தெரிவித்துள்ளார். கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் வாழும் மக்கள் தாக்குதல்களால் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan), […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவில்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார். இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என சர்வதேச […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட ஆஸ்திரேலியா தயார்!

  • March 23, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் 53 இலட்சம் மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது

  • March 23, 2026
  • 0 Comments

இந்தியாவில் 53 இலட்சம் மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்திய போதே இதனைக் கூறியுள்ளார். 41 நாடுகளில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், நெருக்கடி காலங்களுக்காக கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கு இந்தியா முன்னுரிமை […]

danger-of-microplastics-rain-on-forest-canopy-tamil-awareness அறிவியல் & தொழில்நுட்பம்

பிளாஸ்டிக் மழையின் அபாயம்: அழியும் காடுகளும், நம் உயிரும்!

  • March 23, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தினால் ஏற்கனவே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் உலகக் காடுகளுக்கு, இப்போது ‘பிளாஸ்டிக் மழை’ (Plastic Rain) என்ற புதிய அபாயம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (TU Darmstadt) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்திய சமீபத்திய ஆய்வில், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) இப்போது வளிமண்டலத்தின் வழியாகப் பயணித்து, மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடுகளுக்குள்ளும் ஊடுருவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எப்படி காற்றில் பரவுகின்றது: நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

போர் நிறுத்தம்? ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்

  • March 23, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்க மத்தியில், “பகைமைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் தீர்ப்பது” குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்பு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஹார்முஸ் நீரிணையை 48 மணித்தியாலங்களுக்குள் […]