இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

போர் நிறுத்தம்? ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்

  • March 23, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்க மத்தியில், “பகைமைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் தீர்ப்பது” குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்பு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஹார்முஸ் நீரிணையை 48 மணித்தியாலங்களுக்குள் […]

செய்தி

பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் சரிவு

  • March 23, 2026
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் படி பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் படி கடந்த ஜனவரி மாதம் 2.4 வீதமாக பதிவான பணவீக்கம் பெப்ரவரி மாத்தில் 1.6 வீதமாகக் குறைந்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரியில் 3.4 வீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம், பெப்ரவரி மாதத்தில் 1.1 வீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஜனவரியில் 1.6 வீதமாகப் பதிவான உணவு […]

இலங்கை செய்தி

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

  • March 23, 2026
  • 0 Comments

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு […]

இலங்கை செய்தி

முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு

  • March 23, 2026
  • 0 Comments

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்குமான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

AI இலங்கை செய்தி

அரசியல் தீர்வு திட்டம்: தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க ஆயர் மன்றம் வியூகம்!

  • March 23, 2026
  • 0 Comments

தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்காக, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தின் கடந்த காலச் […]

இலங்கை செய்தி

அடையாள அட்டையின்றி கடைக்கு வந்தவரை கைது செய்த பொலிஸார்: யாழில் நடந்தது என்ன?

  • March 23, 2026
  • 0 Comments

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என்பதற்காக குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கைதானவரிடம் இருந்து கைரேகைகள் பெறப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். எதற்காக தனது கைரேகை பதிவு செய்யப்பட்டது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தான் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்துவதற்குகூட அவருக்கு அனுமதி வழங்காது கையடக்க தொலைபேசியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர் வீட்டில் […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை: ஈரான் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அனைத்து கடல்சார் போக்குவரத்து வழிகளும் துண்டிக்கப்பட்டு, பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய மோதல் […]

இலங்கை செய்தி

பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

  • March 23, 2026
  • 0 Comments

வெறுப்பு பேச்சுக்களை வெளியிடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் இன்று (23) போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். “ நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் பிரமுகர்களுக்கு உள்ளது. எனினும், பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து […]

உலகம் செய்தி

ஈரான் பலமாகவுள்ளது! ட்ரம்ப் கனவு காண்கிறார்!

  • March 23, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நினைப்பது போன்று, 48 மணிநேர காலக்கெடு அர்த்தமற்றது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான (Center for Middle East Strategic Studies and a journalist) அபாஸ் அஸ்லானி (Abas Aslani) கூறியுள்ளார். ஈரான் படைகளிடம் எந்த ஒரு பலவீனத்தையும் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் தன் அடையாள உணர்வு (Consciousness of one’s identity) மேலோங்கி நிற்பதால், தற்போதைக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்க இயலாது, என்ற […]

இலங்கை செய்தி

ADB தலைவரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? photos

  • March 23, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) காலை இலங்கை வந்தடைந்த நிலையில், அவரது விஜயத்தின் நோக்கம் குறித்து அரச தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே அவரது விஜயம் இடம்பெறுகின்றது. அவரை, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் […]