உலகம் செய்தி

போர் முடிவுக்குவர வேண்டும்: EU தலைவர் வலியுறுத்து!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, வலியுறுத்தியுள்ளார். இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான பணிகளில் சில ஐரோப்பிய நாடுகள் ஈடுபடத் தயாராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் […]

உலகம் செய்தி

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துகிறது பிரிட்டன்!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக Cyprus தீவில் வான்வெளி பாதுகாப்பை உறுதிப்படுத்த HMS Dragon எனும் போர்க்கப்பல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்கி […]

இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]

இலங்கை

உச்சத்தில் பேருந்து கட்டணம்!

  • March 24, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இரண்டாயிரத்து 159 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 263 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக இரண்டாயிரத்து 422 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் வழக்கம் போல் பேருந்துச் சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என […]

உலகம் செய்தி

‘5 நாள் போர் நிறுத்தம்’ – இஸ்ரேல் கூறுவது என்ன?

  • March 24, 2026
  • 0 Comments

“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் Donald Trump கருதுகின்றார்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்தார். ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். தமது நாட்டுடன் ஈரான் பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறினார். எனினும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. […]

உலகம்

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் […]

ஐரோப்பா செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக தகவல்

  • March 23, 2026
  • 0 Comments

கேன்டர்பரி (Canterbury) பகுதியில் மூளைக்காய்ச்சல் (Meningitis) பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) தெரிவித்துள்ளது. கென்ட் (Kent) பகுதியில் மொத்தம் 29 பேர் மூளைக்காய்ச்சல் பாதிப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரவலுக்கு எதிராக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள நபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கும் நான்கு மருத்துவ மையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பொதுச் சுகாதார சேவைகளின் தகவலின்படி, 9,300 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் மேலும் 12,700 […]

உலகம் செய்தி

ஈரான் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலை சரிவடையும்

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலையில் பாரிய சரிவு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்கள் முக்கிய கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தி வருகின்றன. ட்ரம்ப், இரு நாடுகளும் 15 அம்சங்களை விவாதித்து வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களை கைவிடுவது முதல் முக்கிய அம்சங்களாகும் என்றும் கூறினார். அவர் மேலும், “ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஆனால் எந்த […]

ஐரோப்பா செய்தி

கோப்ரா அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

  • March 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வழிமுறையையும்” பயன்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கோப்ரா அவசரக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் முக்கிய மேடையாக கோப்ரா கூட்டங்கள் உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக ( Starmer) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். போர் காரணமாக மக்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் […]

இலங்கை செய்தி

வலுசக்தி பயன்பாடு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

  • March 23, 2026
  • 0 Comments

“நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற […]