உலகம் செய்தி

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துகிறது பிரிட்டன்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஓர் அங்கமாக Cyprus தீவில் வான்வெளி பாதுகாப்பை உறுதிப்படுத்த HMS Dragon எனும் போர்க்கப்பல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது.

அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்கி ராணுவ ரீதியாக ஆதரவளிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பை நிலைநாட்டவும் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் இந்த அதிநவீன தற்காப்பு உத்திகள் செயல்படுத்தப்படுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி