ஐரோப்பா செய்தி

வடகடல் எரிவாயு திட்டங்கள், கட்டண ஆதரவு குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் வாதப் பிரதிவாதம்

  • March 25, 2026
  • 0 Comments

இந்த வார பிரதமர் கேள்வி நேரத்தில், பிரதமர் ஸ்டார்மர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனொக் இடையே வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்ட உரிமைகள் குறித்து வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. “ரோஸ்பேங்க் மற்றும் ஜாக்டா எரிவாயு வயல்களுக்கு அனுமதி அளிப்பீர்களா?” என படேனொக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டார்மர் “இது எரிசக்தித் துறைச் செயலாளரின் விடயம். ஆனால் எரிசக்தி விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, புதிய ஆதாரங்களை மேம்படுத்துவது அவசியம் என்றார். மேலும், நாடு […]

உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: ஐ.நாவில் 27 ஆம் திகதி விவாதம்!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் UN Human Rights Council எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது. மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்குமாறு ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகிறது. போர் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல்

  • March 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக பாங்சாக் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது. தாய்லாந்து மற்றும் ஈரான் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்து. தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ, கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய ஈரான் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கப்பல்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவித்து, பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

எரிசக்தி கட்டணங்கள் குறைக்கப்படும் – ஸ்டார்மர் உறுதி

  • March 25, 2026
  • 0 Comments

எரிசக்தி கட்டணங்கள் அடுத்த மாதம் £100 பவுண்ட வரை குறைக்கப்படும் என பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எரிசக்தி கட்டணங்கள் குறைக்கப்பட்டதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு உச்சவிலை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குடும்பங்களைப் பாதுகாக்கும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’ – பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா ஆதரவு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்புக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், போரை நிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் எனச் சீனா வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் உரையாடல்களை மீண்டும் […]

உலகம் செய்தி

ஈரானில் தேடுதல் வேட்டை: 39 பேர் கைது!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 39 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்த சோதனையில் ஏழு ஸ்டார்லிங்க் இணைய சாதனங்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு மத்தியில், சட்டவிரோத தகவல் தொடர்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. பிடிபட்டவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களும் மற்ற ராணுவத் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இந்தியா செய்தி

சோனியா காந்திக்கு என்ன நடந்தது? ராகுல் காந்தியின் கேரள பிரச்சார பயணம் ரத்து

  • March 25, 2026
  • 0 Comments

சோனியா காந்தியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், […]

ஆஸ்திரேலியா

வட்டி விகிதம் அதிகரிப்பு: ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் பேருக்கு நிதி நெருக்கடி!

  • March 25, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அண்மையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் சுமார் 14 லட்சம் பேர் வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்பதால், இந்தத் துயரம் இன்னும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 9 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராய் மோர்கன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது. மத்திய கிழக்கு […]

உலகம் செய்தி

துருக்கி–பாகிஸ்தான் மேடையில் சமாதான பேச்சு? பின்னணியில் அமெரிக்கா

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவிடமிருந்து வந்த ஒரு முன்மொழிவை பாகிஸ்தான், ஈரானிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளைகுடா போரின் பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் அல்லது துருக்கியில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த முன்மொழிவின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அது முன்பு கூறப்பட்ட 15 அம்ச அமெரிக்கத் திட்டத்துடன் தொடர்புடையதா என்பதும் தெளிவில்லை என கூறப்படுகிறது. துருக்கியும் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் இடமாக பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், […]

உலகம் செய்தி

குவைட் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – எரிபொருள் சேமிப்பு கிடங்கு இலக்கு

  • March 25, 2026
  • 0 Comments

குவைட் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.