சீனாவின் பெயர் மாற்ற முயற்சி முறியடிப்பு: 27 இடங்களுக்கு இந்திய வரைபடத்தில் அங்கீகாரம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ‘ஜாங்னான்’ எனப் பெயரிட்டுச் சீனா உரிமை கோரி வரும் முயற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, அம்மாநிலத்தில் உள்ள லாங்ஜு, மாஜா, ஜஸ்வந்த் கர், புத்தமந்திர், கம்லாங் நகர் உள்ளிட்ட 27 முக்கிய இடங்கள் மற்றும் புவியியல் விவரங்களை ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முறையாகப் பதிவு செய்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும், இந்த இடங்களைத் துல்லியமாக அடையாளம் காணவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா வரைபடத்தில் குறிப்பிட்ட 27 இடங்களின் பட்டியல்:
1. லாங்ஜு
2. மாஜா
3. பிசா
4. சோ லா
5. ரிசா லா
6. புகுர் லா
7. தாக் லா
8. சம்போ சரோவர்
9. பாரா குண்டுன்
10. சோட்டா குண்டுன்
11. தன் பாரி
12. பிரீத்நகர்
13. புத்தமந்திர்
14. ஜெயராம்பூர்
15. டெரிட்நகர்
16. ராம்நகர்
17. ஜஸ்வந்த் கர்
18. சாகர்
19. பத்மா
20. ஜோதிநகர்
21. பைசாகி
22. ஷேர்-இ-தாபா நினைவிடம்
23. சோட்டா ரோபுக்
24. பாரா ரோபுக்
25. சிவாஜி நகர்
26. சுன்புரா
27. கம்லாங் நகர்




