உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று […]

உலகம் செய்தி

ஈரானை இயக்கும் புடின்: பிரித்தானியா எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே ஆபத்தான ராணுவ உறவு குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் John Healey எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ரஷ்யா தனது புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஈரானுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு “ஆக்கிரமிப்பு அச்சாக” உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்பாடுகளுக்குப் பின்னால் விளாடிமிர் புடினின் மறைமுகக் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!

  • March 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது […]

பொழுதுபோக்கு

‘Love Oh Love’ படத்தின் First Look வெளியீடு!

  • March 26, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதி ‘Love Oh Love’ படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தினை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். மேலும், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராகவும், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும், பி.ஏ. மகேந்திரன் கலை இயக்குநராகவும் பணிப்புரிகின்றனர். இதேவேளை, பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

துருக்கியால் இயக்கப்படும் எரிபொருள் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல்!

  • March 26, 2026
  • 0 Comments

கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த துருக்கியால் இயக்கப்படும் கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Sierra Leonne நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 27 துருக்கி மாலுமிகள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்திலிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயுடன் புறப்பட்ட இந்த கப்பல் Turkish firm Besiktas நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய நிலையில், […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மத்திய பகுதியில் ஈரான் தாக்குதல்: அறுவர் காயம்!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் இன்று 27ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல்களை நடத்திவருகின்றன. மறுபுறத்தில் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தலங்கள்மீது ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. இந்நிலையில் இன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆறு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகென் டேவிட் அடோம் அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

“சுரேஷ் சாலே வைத்தியசாலையில்”-புலி புராணம் பாடுகிறது மஹிந்த அணி!

  • March 26, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]

உலகம்

சூடுப்பிடிக்கும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் அதிரடி

  • March 26, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை ஈரான் உறுதிப்படுத்துவதால், அதற்குக் கைமாறாக […]

பொழுதுபோக்கு

கார் விபத்தில் நடிகை பலி!

  • March 26, 2026
  • 0 Comments

நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா Harshil Kalia (வயது – 30) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ளார். அத்துடன், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார். சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது கார் தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது. இதில் ஹர்ஷில் காலியா, […]

இந்தியா செய்தி

மாயாஜால தேன் எனக்கூறி லட்சங்களை சுருட்டிய ஆசாமி கைது!

  • March 26, 2026
  • 0 Comments

துருக்கியில் உள்ள குகையில் இருந்து பெறப்பட்ட அரிய வகை தேன் எனக் கூறி 15 லட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பு) விற்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் காரத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அசோக், தன்னை சாமியார் என்றும் ஜோதிடர் என்றும் கூறிக் கொண்டு மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணொருவர் கடந்த வாரம் நாசிக் காவல்துறையில் அசோக் மீது பாலியல் வன்கொடுமை […]