உலகம்

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது அதிரடி தாக்குதல்

  • March 25, 2026
  • 0 Comments

குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான  நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

போரில் வென்றுவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதை மறுத்துள்ள ஈரான், தங்களுக்கு அணு ஆயுதக் கொள்கை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அதேபோல போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

  • March 25, 2026
  • 0 Comments

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்காலிக தீர்வுகளுக்கு அப்பால், எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நீண்டகாலத் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என […]

athithiya-anantharajah-appointed-deputy-mayor-pontault-combault-france ஐரோப்பா

பிரான்சில் ஈழத்தமிழர் சாதனை: அதிதியா ஆனந்தராஜா துணைமேயராக நியமனம்!

  • March 24, 2026
  • 0 Comments

பிரான்சின் பொன்டோல்-கொம்போல் (Pontault-Combault) நகராட்சியில் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அதிதியா ஆனந்தராஜா (Athithiya Anantharajah) அவர்கள் துணைமேயராக (Adjoint au Maire) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் (Municipal Elections 2026), ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்மணி அதிதியா ஆனந்தராஜா (Athithiya Anantharajah) அவர்கள், பொன்டோல்-கொம்போல் (Pontault-Combault) நகராட்சியின் துணைமேயராக (Adjoint au Maire) உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிரான்சில் உள்ளாட்சித் […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பாடசாலைகளில் தடுப்பூசி விரிவாக்கம் – 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க தீர்மானம்

  • March 24, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில், மெனிஞ்சைடிஸ் பி (Meningitis B) தடுப்பூசி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தடுப்பூசி, தற்போது 15 மற்றும் 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. இது “நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும்” முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என பிரித்தானிய சுகாதார மற்றும் பாதுகாப்பு முகமை (UKHSA) தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கென்ட்டில் ஏற்பட்ட நோய்ப் பரவலில் […]

இலங்கை செய்தி

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் – இராஜதந்திர பேச்சு

  • March 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் – 300 மில்லியன் ரூபா சொத்து முடக்கம்

  • March 24, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது இதற்கமைய கொழும்பு 14 மற்றும் ஜா-எல பகுதிகளில் அமைந்துள்ள 514 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி, 04 கடை அறைகள், மூன்று மாடி வீடு மற்றும் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய […]

இந்தியா உலகம் செய்தி

ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி பேச்சு: அமைதி முயற்சி குறித்தும் ஆராய்வு!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் இந்திய பிரதமர் Narendra Modi ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி ஊடாகவே இன்று (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை பாதுகாப்பாகவும் தடையின்றியும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்துவம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பிராந்திய அமைதியை நிலைநாட்ட இரு […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம்?

  • March 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எனினும், இந்த கருத்துக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நட்புறவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

லண்டனில் யூத ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையான சம்பவம் – ஈரானிய அரசுக்கு தொடர்பு?

  • March 24, 2026
  • 0 Comments

லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக, ஈரானிய அரசுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு குழுவை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என பெருநகர காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நான்கு ஹட்சோலா ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. […]