இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதலின் முக்கியப் புள்ளி – வைத்தியசாலையில் அனுமதி

  • March 25, 2026
  • 0 Comments

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். அங்கு, வைத்திய ஆலோசனையின்படி […]

உலகம் செய்தி

ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குண்டு தாக்குதல்கள்

  • March 25, 2026
  • 0 Comments

கடந்த மாதம் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட குண்டு தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இது கடந்த வருடம் நடந்த 12 நாள் போரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. மேலும், ஈரான் மற்றும் லெபனானில் புதிய தாக்குதல் இலக்குகளுக்கும் இஸ்ரேல் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணங்களிலிருந்து £150 விலை குறைப்பு

  • March 25, 2026
  • 0 Comments

எரிசக்தி கட்டணங்களிலிருந்து £150 பவுண்ட் விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ளார். பெப்ரவரி மாத பணவீக்க புள்ளிவிபரங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலை உயர்வை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவையும், உணவு மற்றும் தேவையான பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். நிறுவன நிர்வாகத் தடைகளை குறைத்து நீண்டகால எரிசக்தி பாதுகாப்பையும் மேம்படுத்தி, வலுவான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்தை உருவாக்க […]

உலகம் செய்தி

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு

  • March 25, 2026
  • 0 Comments

தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ், எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வழிகளை பாதுகாக்க, வொஷிங்டனுடன் இணைந்து பணியாற்றுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், வியட்நாமில் டீசல் விலை மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அரசப் புள்ளிவிபரங்கள் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் ஈரான் ரகசிய பேச்சு?

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார். ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் Work From Home முறைமையை மேம்படுத்த திட்டம்!

  • March 25, 2026
  • 0 Comments

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் Dr. Harini Amarasooriya தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , சுகாதாரம், கல்வி மற்றும் நீதி ஆகிய அமைச்சுகளின் […]

உலகம் செய்தி

ஈரானுடன் பேச்சு: ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக களத்தில்!

  • March 25, 2026
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இணைந்து ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கையாளுவதாக இஸ்ரேலிய அமைச்சர் Nir Barkat தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முரண்பாடுகள் தென்பட்டாலும், இரு தலைவர்களும் ஒருமித்த நோக்கத்துடன் இந்த விவகாரத்தை அணுகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் அந்த நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவத் திறன்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், […]

உலகம்

600 மணித்தியாலங்களைக் கடந்த இணையத் தடை

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் சர்வதேச தகவல் வலைப்பின்னல்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் காலத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை இதன் மூலம் மீறப்படுவதாகச் சில ஆய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அரசாங்கத்தின் தடையை மீறி அவ்வப்போது இணையத்துடன் இணைய முயன்ற 466 பேர் கடந்த சில நாட்களில் ஈரான் […]

விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி T-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

  • March 25, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான கடைசி T – 20 போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-2 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 2-2 கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று (25) 5-வது T20 போட்டி Hagley Oval மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய […]

பொழுதுபோக்கு

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சூரி!

  • March 25, 2026
  • 0 Comments

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் Poster வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. `கொட்டுக்காளி’, `விடுதலை’, `மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகின்றார். `இன்று நேற்று நாளை’ மற்றும் `அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.