பொழுதுபோக்கு

இந்த பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்… பயில்வானை விளாசிய விஷால்

  • April 15, 2024
  • 0 Comments

ஒரு பெண்ணை பற்றியோ, கதாநாயகி பற்றியோ தவறாக பேசி யூடியூபில் பணம் சம்பாதித்து வருபவர்களை பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கும், இப்படி நீங்க சம்பாதிப்பதற்கு பதிலா கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என்று பயில்வான் ரங்கநாதனை விஷால் மறைமுகமாக திட்டினார். தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதில், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட […]

இலங்கை

14 வயது மாணவி கடத்தல் ; 17 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்

  • April 15, 2024
  • 0 Comments

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர் . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் சொந்த இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) திரும்பி வீட்டில் […]

ஆசியா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!

  • April 15, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், மே 15ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தப் பதவியை துணை லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார் என்று அவரது அலுவலகம் இன்று (15.04) அறிவித்துள்ளது. 72 வயதான லீ, தற்போது துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருக்கும் வோங்கை அவருக்குப் பின் நியமிக்குமாறு நகர-மாநிலத் தலைவருக்கு முறையாக ஆலோசனை வழங்குவார் என்று அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் சட்டமியற்றுபவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலின் இரு விமான தளங்கள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்

  • April 15, 2024
  • 0 Comments

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை […]

பொழுதுபோக்கு

கிசு கிசுக்கப்பட்ட நடிகையையும், மூத்த நடிகரையும் இணைத்துக்கொண்ட லோகேஷ்

  • April 15, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் தலைவர் 171 பட பணிகளை துவங்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பரவிவருகின்றன. வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் மட்டும் டீசர் வெளியாகவுள்ள நிலையில் அந்த டீசருக்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதேபோல இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சோபனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாயகியாக நடிக்க […]

உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் இருமல் மருத்துக்கு எதிராக தடை விதித்துள்ள ஆறு நாடுகள்!

  • April 15, 2024
  • 0 Comments

குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் கலந்தமையினால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு ஆறு நாடுகள் தடைவித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை […]

இலங்கை

திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : 07 பேர் உயிரிழப்பு!

  • April 15, 2024
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் ஏழு பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நட்பு ரீதியாக மது அருந்தி கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வால்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று (15.04) அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 20 பதுக்கும் 25க்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு படுகாயம் அடைந்தனர். இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மஹதிவுல்வெவ […]

உலகம்

இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!

  • April 15, 2024
  • 0 Comments

ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்ற பெயரில் ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரம் வரும்போது பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில் அமெரிக்காவும் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, ஈரானுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இல்லையேல் அப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத போர்ச் சூழல் உருவாகலாம் என வலியுறுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கு […]

இலங்கை

இலங்கை : துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு!

  • April 15, 2024
  • 0 Comments

பொலன்னறுவை கிரித்தலே யாய 4 பகுதியில் நேற்று (14.04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அவருக்கும் சிறுமிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலையுண்ட இளம்பெண் சிறிது காலத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய […]

இலங்கை

முல்லேரியாவில் இரத்தினக் கற்களால் செய்யப்பட்ட சிலையை விற்பனை செய்ய முயற்சி!

  • April 15, 2024
  • 0 Comments

முல்லேரிய பிரதேசத்தில் அம்பர் மற்றும் இரத்தினக் கற்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடவுள் சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அங்கொட மற்றும் கடுவெல பிரதேசங்களை சேர்ந்தவர்கள். குறித்த கடவுள் சிலை தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முல்லேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.