இலங்கை

14 வயது மாணவி கடத்தல் ; 17 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர் .

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் சொந்த இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்

குற்றவெளியிலிருந்து கிரான் குளத்துக்கு ஏப்ரல் 9ஆம் திகதி வந்த மேற்படி காதலன் குறித்த மாணவியை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார் கொழும்பிலிருந்து மீண்டும் ஞாயிறுக்கிழமை (14) ஊர் திரும்பிய நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்