எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராஃபா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்
ராஃபா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையிலும் இஸ்ரேல் தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் பீரங்கிகளும் வான்வழி தாக்குதல்களுடன் கனரக வாகனங்களும் வடக்கு காஸா வட்டாரத்தில் உள்ள ஜபாலியாவுக்குள் முன்னேறியுள்ளதாக திங்கட்கிழமை அன்று குடியிருப்பாளர்களும் ஹமாஸ் ஊடகங்களும் தெரிவித்தன. தெற்கு ராஃபாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை இஸ்ரேலிய பீரங்கிகளும் துருப்புகளும் கடந்துள்ளன. ஜபாலியாவில் காஸாவின் எட்டு சிறப்பு அகதிகள் முகாம்கள் உள்ள முக்கியப் பகுதியை நோக்கி டாங்கிகள் முன்னேற முயற்சி செய்து வருகின்றன. பீரங்கிகளிலிருந்து பாய்ந்த […]













