பதவியை ராஜினாமா செய்த சாட் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா
ஜனாதிபதித் தேர்தலில் இராணுவ அரசாங்கத் தலைவர் மஹமத் இட்ரிஸ் டெபியிடம் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, தனது ராஜினாமாவை கையளித்ததாக சாடியன் பிரதமர் சக்ஸஸ் மாஸ்ரா தெரிவித்துள்ளார். மாஸ்ரா,ஏப்ரல் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பாளர். எதிர்க்கட்சிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஜனவரி மாதம் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். “நான் எனது ராஜினாமாவையும் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் ராஜினாமாவையும் சமர்ப்பித்துள்ளேன், இது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் பொருத்தமற்றதாகிவிட்டது” […]













