ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

UKவில் தேர்தலில் இருந்து விலகும் தலைவர்கள் :  மாற்றத்திற்கான அறைக்கூவல்!

  • May 25, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வரும் ஜுலை மாதம் 04 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக உள்ளுராட்சி தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. எதிர்பாராத விதமாக தொழிற்கட்சி அபார வெற்றிப்பெற்றது. ஆகவே பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு மிகப் பெரிய வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் […]

ஐரோப்பா

UKவில் கைத்தொலைபேசிகளை தடை செய்வது தொடர்பில் பரிசீலனை!

  • May 25, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கல்விக் குழுவும் பள்ளிகளில் மொபைல் போன்களை சட்டப்பூர்வமாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தொலைபேசிகளை பாவிப்பதால் குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2022 க்கு இடையில் குழந்தைகளின் திரை நேரம் 52% அதிகரித்துள்ளதாகவும், நான்கில் ஒரு பகுதியினர் தங்கள் சாதனங்களுக்கு அடிமையாகும் விதத்தில் […]

மத்திய கிழக்கு

அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து ராஃபா மீது தாக்குதல்கள் தொடர்ந்த இஸ்‌ரேல்

  • May 25, 2024
  • 0 Comments

ராஃபா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் மே 24ம் திகதி தீர்ப்பளித்தும் பலனில்லாமல் போனது.தீர்ப்பைப் புறக்கணித்து இன்று( 25) இஸ்‌ரேல், ராஃபா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தது. காஸாவின் வடக்குப் பகுதியில் மூன்று பிணைக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் வலியுறுத்தியது. பாலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய உணவால் மக்களை ஈர்த்த ஈழத் தமிழர் – யார் இந்த பிரின் பிரதாபன்?

  • May 25, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இடம்பெற்ற சமையல் போட்டியொன்றில் தமிழர் பாரம்பரிய உணவால் வெற்றிவாகை சூடிய ஈழத் தமிழர் தொடர்பில் உலக நாடுகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணருமான பிரின் பிரதாபன், பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியின் “Masterchef 2024” சமையல் போட்டில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றுள்ளார். பிபிசி தொலைக்காட்சியின் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சமையல் போட்டியின், 20ஆவது தொடர் முடிவில் பிரின் பிரதாபன் குறித்த வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் குறித்த போட்டியின் […]

விளையாட்டு

காதல் மனைவியுடன் விவாகரத்து? – ஹர்திக் பாண்டியா தொடர்பில் வெளியான தகவல்

  • May 25, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஹர்திக் பாண்டியா 2020ஆம் ஆண்டு செர்பிய நாட்டு நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதே வருடத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. அண்மைய நாட்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில் Natasa Stankovic Pandya என […]

செய்தி வட அமெரிக்கா

2ஆம் உலகப் போரில் உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய போர் கப்பல் கண்டுபிடிப்பு

  • May 25, 2024
  • 0 Comments

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் தென் சீனக் கடலின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அதிக எண்ணிக்கையிலான ஜப்பானிய போர்க்கப்பல்களை மூழ்கடித்தது இந்த நீர்மூழ்கிக் கப்பல் என்று கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸின் வடக்குத் தீவான லூசோன் பகுதியில் 3,000 அடி (914 மீட்டர்) உயரத்தில் யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்டர் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – கைது செய்த பொலிஸார்

  • May 25, 2024
  • 0 Comments

எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலை பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு செய்திருந்த நபரொருவரிடம்‌ இருந்தே குறித்த அதிபர் கையூட்டலைப் பெற முயற்ச்சித்துள்ளார். மத்திய நேர உணவு வழங்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமாயின் தமக்கு பணம் வழங்குமாறு சந்தேக நபரான பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து […]

உலகம்

TikTok நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

  • May 25, 2024
  • 0 Comments

உலகளவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக ByteDance நிறுவனம் அறிவித்துள்ளது. ByteDance நிறுவனத்தின் TikTok தளத்தில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு நீக்கப்படவுள்ளது. பணிநீக்கம் குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் நிறுவனத்திற்குள் மட்டும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விளம்பரப் பிரிவிலும் செயலாக்கப் பிரிவிலும் பணிபுரியும் ஊழியர்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. பாதிக்கப்படும் ஊழியர்கள் சிலருக்கு, மற்ற பிரிவில் வேலை பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமெரிக்க இணையத் தொழில்நுட்ப வெளியீடான The Information தெரிவித்தது. சிங்கப்பூரிலும், அமெரிக்காவின் லாஸ் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 இளைஞர்கள்

  • May 25, 2024
  • 0 Comments

தொம்பே, மல்வான மைவல பிரதேசத்தில் வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 2 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொம்பே, மல்வான மைவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு – இளைஞர்களிடையே ஏற்பட்ட மாற்றம்

  • May 25, 2024
  • 0 Comments

வாழ்க்கைச் செலவு காரணமாக இளம் ஆஸ்திரேலியர்கள் பல அத்தியாவசியப் பொருட்களைக் குறைத்துக்கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 60 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டில் பயணம் மற்றும் உணவு உண்பதற்காக அதிகம் செலவிட்டுள்ளனர், அதே சமயம் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர் என புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. காமன்வெல்த் வங்கி அறிக்கைகளின்படி, 25 முதல் 29 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் கடந்த 12 மாதங்களில் தங்கள் செலவினங்களை 3.5 சதவீதம் குறைத்துள்ளனர். காப்பீடு, […]