உலகம் செய்தி

லெபனானில் 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு UN’s refugee agency கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, லெபனானுக்கு சர்வதேச சமூகம் அவசரகால நிதி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் : சமரச முயற்சியில் சீனா!

  • April 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கோரிக்கை என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது ஈரானிய சகாவிடம் தெரிவித்தார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசிய வாங் யி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்  ஹோர்முஸ் ஜலசந்தியின் கரையோர நாடாக ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றுமொரு கப்பலை முற்றுகையிட்ட அமெரிக்கா!

  • April 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்ற மற்றொரு கப்பலை அமெரிக்க கடற்படையினர் வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளனர். திருப்பி அனுப்பப்பட்ட கப்பல், ஈரான் கொடி ஏற்றப்பட்ட ஒரு சரக்குக் கப்பல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (DDG-111) என்ற போர்க்கப்பல் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த கப்பலுடன் அமெரிக்கா இதுவரை 10 கப்பல்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை முற்றுகையை விதித்து மூன்றே […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான முன்னுரிமையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் வலியுறுத்து!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Bagher Ghalibaf வலியுறுத்தியுள்ளார். அத்துடன், லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு விரிவான போர்நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். லெபனானில் அமைதி திரும்புவது ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகவே அமையும் எனவும் ஈரான் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான […]

உலகம்

உக்ரைன் மீது குண்டு மழைப் பொழிந்த ரஷ்யா!

  • April 16, 2026
  • 0 Comments

உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 12 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “மருத்துவர்களின் கூற்றுப்படி, தலைநகரில் 12 வயது சிறுவன் மற்றும் 35 வயது பெண் என இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கீவ் நகருக்கான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் தங்குமிடங்களிலேயே தங்கியிருக்குமாறும் கீவ் […]

உலகம்

நீடித்த அமைதிக்கான அஸ்திவாரம் – 34 ஆண்டுகளின் பின் ஒன்றுக்கூடும் தலைவர்கள்!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் 34 ஆண்டுகளுக்கு பின் நாளைய தினம் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை  முன்னெடுப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து  அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனானின் தூதர்கள் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முயற்சிக்கிறோம். “இரு […]

உலகம்

சோமாலிலாந்துக்கான முதல் தூதரை நியமித்தது இஸ்ரேல்!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய அரசாங்கம் சோமாலிலாந்துக்கான (Somaliland) தனது முதல் தூதரை நேற்று நியமித்துள்ளது. கென்யாவிற்கான இஸ்ரேலிய தூதராகப் பணியாற்றிய மைக்கேல் லோடெமின் (Michael Lotem) புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலான தூதரகத் தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சோமாலிலாந்தை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கையை வரவேற்றுள்ள அந்நாட்டின் ஜனாதிபதி  அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி (Abdirahman Mohamed Abdullahi), நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இஸ்ரேல் தன்னை ஒரு “நம்பகமான கூட்டாளி” […]

இலங்கை செய்தி

வடக்கில் திணைக்களங்களை கண்காணிப்பதற்கு விசேட குழு!

  • April 16, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், நேற்றுப் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:- மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி […]

உலகம்

துருக்கியில் இருவேறு பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு – 09 பேர் பலி!

  • April 16, 2026
  • 0 Comments

துருக்கியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள் உள்பட ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி (Mustafa Cifci) உறுதிப்படுத்தியுள்ளார். கஹ்ரமன்மராஸ் (Kahramanmaras) பகுதியில் உள்ள அய்ஸர் காலிக் ( Ayser Calik)  மேல்நிலைப் பாடசாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதாக  உள்ளூர் ஆளுநர் முகர்ரென் உன்லுயர் (Mukerren Unluer) தெரிவித்துள்ளார். இதேவேளை  நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள […]

ஆஸ்திரேலியா செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா!

  • April 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (16) வெளியிடப்பட்டுள்ள ‘2026 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின்’ (National Defence Strategy 2026) படி, நாட்டின் பாதுகாப்புச் செலவினம் வரும் 2033 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்காக கூடுதலாக 53 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும். இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். “இரண்டாம் […]