உலகம்

துருக்கியில் இருவேறு பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு – 09 பேர் பலி!

துருக்கியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள் உள்பட ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி (Mustafa Cifci) உறுதிப்படுத்தியுள்ளார்.

கஹ்ரமன்மராஸ் (Kahramanmaras) பகுதியில் உள்ள அய்ஸர் காலிக் ( Ayser Calik)  மேல்நிலைப் பாடசாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதாக  உள்ளூர் ஆளுநர் முகர்ரென் உன்லுயர் (Mukerren Unluer) தெரிவித்துள்ளார்.

இதேவேளை  நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மற்றொரு உயர்நிலைப் பாடசாலையில்,   முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள்  கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைக்காக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!