இஸ்ரேலுக்கான முன்னுரிமையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் வலியுறுத்து!
இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Bagher Ghalibaf வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு விரிவான போர்நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லெபனானில் அமைதி திரும்புவது ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகவே அமையும் எனவும் ஈரான் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சின்போது ஈரான் தூதுக்குழுவுக்கு சபாநாயகர் Bagher Ghalibaf தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





