உலகம் செய்தி

அனைவருக்கும் வெற்றி தேவை: போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு அதிகம் என நிபுணர் கருத்து

அனைத்துத் தரப்பினரின் நலன்களுக்காக அமைதி அவசியம் என மத்திய கிழக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் கவனம் செலுத்தும் ‘சதம் ஹவுஸ்’ சிந்தனைக் குழுவின் இணை ஆய்வாளரான டாக்டர் லீனா கதிப், பிபிசியிடம் பேசியபோது, இந்த 10 நாள் போர் நிறுத்தம் மேலும் நிலையான ஒரு தீர்வுக்குத் தாரகமாக அமையும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறினார்.

“அனைத்து தரப்பினருக்கும் வெற்றியை வெளிப்படுத்துவது முக்கியமானது. அதனால் அமைதி அவர்களுக்கே நன்மை தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைப் பொருத்தவரை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கான புகழைத் தனக்கே வழங்கிக்கொண்டுள்ளார் என்றும், தாம் போர்களை முடிவுக்கு கொண்டு வருபவர் என்பதை நிருபிக்க விரும்புகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் என்பது லெபனானிலிருந்து முழுமையாக வெளியேறுவதை குறிக்கவில்லை என்றாலும், முடிவுகளை காட்ட வேண்டிய அவசியம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவும் இந்த போர் நிறுத்தத்திற்கான வெற்றியை தங்களுக்கே உரியதாக காட்ட முயற்சிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த உடன்பாடு ஏற்பட்டதாக ஈரான் கூறி வருகிறது.

இதனால், அனைத்து தரப்பினரும் வெற்றியை வெளிப்படுத்த விரும்புவதால், இந்த போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என அவர் மதிப்பிட்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!