உலகம்

பாதுகாப்பு என்ற போர்வையில் நிலங்களை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேல் பாதுகாப்பு” என்ற போர்வையில்  மேலும் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ( Hakan Fidan) குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இஸ்ரேல் தனது சொந்தப் பாதுகாப்பை நாடவில்லை.  நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக, நெதன்யாகு அரசாங்கம் பாதுகாப்பை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே லெபனானுடன் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருந்த போதிலும், தெற்கு லெபனானில் தான்  கைப்பற்றிய” அனைத்து நிலைகளையும் இஸ்ரேல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

மேலும் லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்றும், லெபனானிய குழுவான ஹிஸ்புல்லா “எப்படியாவது” நிராயுதபாணியாக்கப்படும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்