ஐரோப்பா செய்தி

டேங்கர் மீது தாக்குதல் – ஹார்முஸ் பகுதியில் பதற்றம் அதிகரிப்பு

ஹார்முஸ் நீரிணையில் டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துப்பாக்கிப் படகுகள், ஓமானின் வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த டேங்கர் கப்பலை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பலும் அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, நீரிணையை கடக்க முயன்ற  இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!