பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, இத்தாலி ஆராய்வு!
இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் தூதுவர் Damiano Francovigh, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினர்.
குறிப்பாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தூதர் Francovigh, இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையேயான நீண்டநாள் நட்புறவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன், பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படு உறுதியளித்தார்.





