இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆபத்தாக மாறும் காட்டுத் தீ – 5 பேர் பலி

  • January 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை முதல் பரவி வரும் இந்த தீப்பரவல், லொஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப் பெரிய தீப்பரவல் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸின் பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Fact-checking வசதியை கைவிடும் மெட்டா

  • January 9, 2025
  • 0 Comments

இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது. மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பேர்க் எக்ஸ் தளத்தில் காணப்படுவது போன்ற […]

இலங்கை

இலங்கையின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

  • January 9, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், களுத்துறை, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் […]

விளையாட்டு

பும்ராவை டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென அழுத்தம்

  • January 9, 2025
  • 0 Comments

ஜஸ்பிரீத் பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றார். சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் பும்ரா முதுகு வலியால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதனால் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியவில்லை. ரோஹித் தலைமையில் அனைத்து போட்டிகளும் தோல்வியுற்ற […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில் விடுமுறை பெற்று வீடுகளில் முடங்கும் ஊழியர்களால் நெருக்கடியில் நிறுவனங்கள்

  • January 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் ஊழியர்கள் சுகயீனம் காரணமாக அதிகளவான விடுமுறைகளை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேலையிடங்களுக்கு செல்லாமல் பலர் சுகயீன விடுறையில் வீடுகளில் தங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களை குறிப்பிட்டு விடுமுறை பெறுவதாகவும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் விடுமுறைக்கான காரணமாக குறிப்பிட்டுள்ளனர். ஊழியர்களின் விடுமுறை அதிகரிப்பால் தொழில் வழங்குநர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளில் புதிய நடைமுறை – வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்

  • January 9, 2025
  • 0 Comments

ஜனவரியில் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை அமலுக்கு வரும் நிலையில் வங்கி பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள வங்கி மற்றும் சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவின்றி சில நொடிகளில் பணத்தை மாற்ற முடியும். இன்று முதல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் உடனடி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். அதற்கமைய, வங்கிகளில் வசூலிக்கப்படும், உடனடி வங்கிப் பரிமாற்ற கட்டண முடிவுக்கு வருகிறது. அதற்கமைய இலவசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வேலை இடங்களில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • January 9, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை இடங்களில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது. Radin Mas தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளருமான மெல்வின் யோங் இதனை தெரிவித்துள்ளார். நியாயமான வேலையிட மசோதாவிற்கான இரண்டாம் வாசிப்பை அவர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். மருத்துவப் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர், நோயாளிகளுக்கு மனநோய் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு மனநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் எனப் பொருள்படும் என்று […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

  • January 9, 2025
  • 0 Comments

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று நடாத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை […]

செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில்

  • January 8, 2025
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான மார்ட்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ’டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி. எனது […]

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கான புதிய ஆயுதப் பொதியை அறிவிக்கவுள்ள அமெரிக்கா

  • January 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி ஜோ பைடனின் ஆயுத உறுதிமொழி மாநாடுகளின் இறுதிக் கூட்டத்தில் வியாழன் அன்று உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு (UDCG), ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் வழக்கமாக சில மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கும் சுமார் 50 நட்பு நாடுகளை உள்ளடக்கியது. 2022 இல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், கெய்விற்கு ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்த தொடங்கினார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் […]