1.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள நான்கு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ள இந்தியா
போர்த்திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை உறுதி செய்வதை ஊக்குவிக்கும் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நான்கு முக்கிய மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடவிருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான INS விக்ராந்தின் தளத்தில் இருந்து இந்த ரபேல் விமானங்கள் இயக்கப்படும். இதேபோன்று பிரான்ஸ் நாட்டுடன் ரூ.38,000 கோடியில் மேலும் ஒரு […]













