இலங்கை: தேடப்படும் சந்தேக நபர்கள் இருவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தல்
இந்தியாவில் நேற்று (பிப்ரவரி 18) கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, போதைப்பொருள் கடத்தல்காரன் என்று கூறப்படும் ‘ஹரகா கட்டா’ எனப்படும் நடுன் சிந்தகவின் தப்பிக்கும் முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படும் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீபவும் இன்று இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இரண்டு சந்தேக நபர்களில் அடங்குவார். இலங்கை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய INTERPOL சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்து […]













