உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • April 28, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.28 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.931 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

  • April 28, 2025
  • 0 Comments

ஸ்டோரேஜ் குறைபாடு என்பது இன்றைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு எரிச்சலூட்டும் பிரச்சனை ஆகும். பொதுவாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது போனில் பல்வேறு வித செயலிகளை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செயலியும் அது இயங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ் அல்லது மெமரியை எடுத்துக் கொள்ளும். மேலும் அதில் தரவிறக்கப்படும் மீடியா ஃபைல்களுக்காக தனியாக மெமரியை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக சிறிது சிறிதாக உங்களது போன் ஸ்டோரேஜ் குறைந்து கொண்டே […]

வாழ்வியல்

செயற்கை இனிப்புகளை நீண்ட காலம் பயன்படுத்துவது பேராபத்து

  • April 28, 2025
  • 0 Comments

செயற்கை இனிப்புகளை நீரழிவு நோயாளிகள் மட்டுமல்லாது, கலோரி உட்கொள்ளலை குறைக்க நினைப்பவர்களும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் பெரும்பாலானோருக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிவதில்லை. செயற்கை இனிப்புகள் எடையைக் குறைக்க உதவும் என பலர் நினைக்கின்றனர் ஆனால் மாறாக, அவை பசியை அதிகரிக்கும். இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் தூண்டும். இது உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைத் தவிர்ப்பதற்காக இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் […]

இன்றைய முக்கிய செய்திகள்

சற்று முன்னர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில்!

  • April 28, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி பிரச்சினையை எடுத்துக்காட்டும் புகைப்படம் இணையத்தில் வைரல்

  • April 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி பிரச்சினையின் சோகமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள பூங்காவில் ஒரு பெண் வீடு இல்லாமையினால் தஞ்சம் புகுந்தது பற்றிய தகவலை அது தெரிவிக்கிறது. குயின்ஸ்லாந்தின் மோர்டன் விரிகுடாவில் உள்ள எடி ஹைலேண்ட் பூங்காவில், அந்தப் பெண் கரடுமுரடான ஸ்லீப்பர்களை அகற்றிக் கொண்டிருந்தபோது காணப்பட்டார். மழையில் அழும் இந்தப் பெண்ணின் புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூர் வீடற்ற தொண்டு நிறுவனமான நரிஷ் ஸ்ட்ரீட்டின் நிறுவனர் பியூ ஹேவுட், தன்னை வலுக்கட்டாயமாக […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

ஜனாதிபதி டிரம்ப் மீது கடும் அதிருப்த்தியில் அமெரிக்கர்கள் – ஏழு தசாப்தங்களில் இதுவே முதல்முறை

  • April 28, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் அவரது செயல்திறன் குறித்த அமெரிக்கர்களின் கருத்துக்கள் மிகவும் எதிர்மறையாக மாறியுள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட அமெரிக்கர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் அவரது செயல்திறனை ஆதரித்துள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்ற முதல் 100 நாட்களில் அடைந்த மிகக் குறைந்த புகழ் மதிப்பீடு […]

விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் 150வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி!

  • April 28, 2025
  • 0 Comments

ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும். மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை […]

இலங்கை

இலங்கையில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

  • April 28, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த […]

ஐரோப்பா

எந்தவித நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – புட்டின் அறிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப்பின் சிறப்புத் தூதராக வந்த விட்காஃபிடம் புதின் பேச்சு நடத்தியுள்ளார். இதன் போது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே உக்ரைனில் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் தொடுத்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  

ஐரோப்பா

ஜெர்மனியில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 15 யூரோக்களாக அதிகரிப்பதில் சர்ச்சை

  • April 28, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 15 யூரோக்களாக அதிகரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் முறுகல் நிலை வெடித்துள்ளது. பிரிட்ரிச் மெர்ட்ஸின் சமீபத்திய கருத்துக்களால் இந்த உயர்வு 2027ஆம் ஆண்டு வரை நடைமுறைக்கு வராது என தெரியவருகின்றது. குறிப்பாக ஊதிய உயர்வுக்காக SPD வலுவாக பிரச்சாரம் செய்ததால் இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், CDU/CSU மற்றும் SPD இடையேயான கூட்டணி உடன்படிக்கையில் குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதற்கான தெளிவான சூத்திரம் ஏற்கனவே உள்ளதால், […]