காஸாமீது கருணை காட்டுங்கள்; இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள WHO தலைவர்
காஸாமீது கருணை காட்டுங்கள் என்று இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதானம் கெப்ரியேசஸ். வியாழக்கிழமை (மே 22) உலகச் சுகாதார நிறுவனத்தின் வருடாந்தரச் சந்திப்பில் டாக்டர் டெட்ரோஸ் இதைத் தெரிவித்தார்.மேலும், அமைதியை நிலைநாட்டுவது இஸ்ரேலின் கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காஸா மீதான போர் இஸ்ரேலைப் பாதிக்கிறது, இந்தப் போர் எந்த ஒரு தீர்வையும் தராது என்று டெட்ரோஸ் கூறினார். “போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்களின் உணர்ச்சியை என்னால் நன்கு புரிந்துகொள்ள […]













