இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி கவிழுமா? எதிரணியின் நோக்கம் என்ன?

  • June 3, 2026
  • 0 Comments

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்: 48 அணிகள் களத்தில்!

  • June 3, 2026
  • 0 Comments

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன. உலகக் கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு […]

உலகம்

ஐ.நா பொதுச் சபையின் 81வது அமர்வின் தலைவராக கலிலூர் ரஹ்மான் தெரிவு!

  • June 3, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வின் தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், சைப்ரஸைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸை தோற்கடித்து அவர் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில், வங்கதேச வெளியுறவு அமைச்சர் 99 வாக்குகளையும், சைப்ரஸ் வேட்பாளர் 91 வாக்குகளையும் மட்டுமே பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவி ஐந்து பிராந்தியக் குழுக்களிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இம்முறை 81வது அமர்வின் […]

உலகம் செய்தி

6 நாடுகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi , துருக்கி, கத்தார், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த இந்த அவசர ஆலோசனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுடனான உரையாடலில் அந்த நாட்டின் ராணுவத் தளபதியும் […]

இந்தியா

டெல்லியில் பற்றி எரிந்த உணவகம் : 20 பேர் உயிரிழப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

டெல்லியில் பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏறக்குறைய 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த தீவிபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 04 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 08 பேர் சிசிக்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி (DDMA) துணை மாவட்ட ஆட்சியர் (SDM) ஜிதேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் மேல் தளங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் […]

உலகம்

இந்தியா மீது வர்த்தக வரி விதிக்க அமெரிக்கா பரிசீலனை!

  • June 3, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்பு தடையை அமுல்படுத்தாத இந்தியா உள்ளிட்ட 59 நாடுகள் மீது  வரி விதிப்பது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இந்தியா உட்பட   முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது 12.5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகளவில் சமமற்ற ஒரு களத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் வர்த்தக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த ஏற்றத்தாழ்வை […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உளவு தகவல் வழங்கும் ஆஸி. போர் விமானம்!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய விமானப்படையின் E7 Wedgetail போர் விமானம், மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக அந்நாட்டுத் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த நவீன கண்காணிப்பு விமானம், வான்வழி அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கைகளை சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. சேகரிக்கப்படும் இந்தத் தகவல்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமான செயல்பாட்டு மையத்திற்கும் நேரடியாக அனுப்பப்படுகின்றன. இருப்பினும், இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியலுக்கு வருகிறாரா முன்னாள் ராணுவ சவேந்திர சில்வா?

  • June 3, 2026
  • 0 Comments

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, வடமத்திய மாகாணசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என வெளியாகும் தகவலை ஐமச SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார். சவேந்திர சில்வா வடமத்திய மாகாணசபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம், சிங்கள ஊடகமொன்று […]

உலகம்

இலக்கை தவறவிட்ட ஈரான்!! 47 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கோரும் ட்ரம்ப்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது இடைமறிக்கப்பட்டன என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவத் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தை இலக்காகக் கொண்ட இரண்டு ஏவுகணைகள் செல்லும் வழியிலேயே சிதறியதாகவும், பஹ்ரைனை இலக்காகக் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகள் இடைமறித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் […]