உலகம் செய்தி

6 நாடுகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு!

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi , துருக்கி, கத்தார், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த இந்த அவசர ஆலோசனை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானுடனான உரையாடலில் அந்த நாட்டின் ராணுவத் தளபதியும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கையாளவும், தங்களின் நிலைப்பாட்டை விளக்கவும் இந்த ராஜதந்திர முயற்சிகளை ஈரான் மேற்கொண்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!