ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உளவு தகவல் வழங்கும் ஆஸி. போர் விமானம்!

ஆஸ்திரேலிய விமானப்படையின் E7 Wedgetail போர் விமானம், மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக அந்நாட்டுத் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த நவீன கண்காணிப்பு விமானம், வான்வழி அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கைகளை சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

சேகரிக்கப்படும் இந்தத் தகவல்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமான செயல்பாட்டு மையத்திற்கும் நேரடியாக அனுப்பப்படுகின்றன.

இருப்பினும், இந்த முக்கியமான உளவுத் தகவல்கள் எவையும் இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டன் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி