அரசியல் இலங்கை செய்தி

அரசியலுக்கு வருகிறாரா முன்னாள் ராணுவ சவேந்திர சில்வா?

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, வடமத்திய மாகாணசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என வெளியாகும் தகவலை ஐமச SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

சவேந்திர சில்வா வடமத்திய மாகாணசபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம், சிங்கள ஊடகமொன்று வினவியது.இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியவை வருமாறு ,

“சவேந்திர சில்வா என்பவர் நாட்டுக்காக சேவையாற்றிய ராணுவ வீரர். அவர் அப்படியான முடிவை எடுக்க மாட்டார். அரசியல் பற்றி அவர் பேச விரும்புவதில்லை.

மாகாணசபைத் தேர்தல் பற்றி நான் அவருடன் கதைக்கவில்லை. அவ்வாறு கதைத்திருந்தால்கூட என்னை திட்டி இருப்பார்.

எனவே, மேற்படி தகவல் போலியானது. ஆளுங்கட்சியின் சலவை இயந்திரங்களே இப்படியான தகவல்களை பரப்பி வருகின்றன. கட்சி மட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்படவில்லை.

சவேந்திர சில்வாவை அரசியலுக்கு கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுக்கின்றேன் என்ற தகவலும் பிழை.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!