ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதத்தை 15% ஆகக் குறைக்க டிரம்ப் திட்டம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் மாணவர்களில் அதிகபட்சம் 15% மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.“அவர்கள் 15% உச்சவரம்பாக வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து, 31% அல்ல,” என்று டிரம்ப் புதன்கிழமை (மே 28) வெள்ளை மாளிகையில் கூறினார். “ஹார்வர்ட் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் பயில விரும்புவோர் (இங்கு) இருக்கின்றனர். வெளிநாட்டு மாணவர்கள் இருப்பதால் அவர்களால் அந்நிலையங்களில் சேர்ந்துகொள்ள முடியவில்லை,” என்றார் டிரம்ப். ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதை டிரம்ப் […]













