மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடிக்க வேண்டும் என விரும்பும் ஆண்கள் – ஆய்வில் தகவல்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்பை அவர்கள் மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக, சமீபத்தில் 1,032 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தனது மாதவிடாய் வலியை, தனக்கு நெருங்கிய ஆண்கள் விரும்புவதில்லை என்று மூன்றில் இரண்டு பெண்கள் கூறியதுதான் கவலையை ஏற்படுத்துகிறது. […]













