கிரீஸில் நடைமுறைக்கு வரும் புதிய குடியேற்ற சட்டங்கள் : நாடு கடத்தப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவர்!
கிரீஸில் புதிய குடியேற்ற சட்டங்கள் இந்த கோடையில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரவிருக்கும் கடுமையான கொள்கைகளின் கீழ், புலம்பெயர்ந்தோருக்கான பெருமளவிலான சட்டப்பூர்வ திட்டங்களை கிரீஸ் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கும் நபர்களை சிறையில் அடைக்கும் என்றும் குடியேற்ற அமைச்சர் மக்கிஸ் வோரிடிஸ் தெரிவித்தார். நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கைகளைக் கொண்ட புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார்கள், நாடுகடத்தப்பட்டவுடன் தண்டனைகள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிரேக்கத்தின் பழமைவாத அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட […]













