பிரதமரின் கசிந்த தொலைபேசி அழைப்பின் விளைவுகளால் நெருக்கடியில் சிக்கியுள்ள தாய்லாந்து அரசாங்கம்
தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக ஊடகத்தில் கசிந்தது.அந்த விவகாரத்தால் தாய்லாந்து மக்கள் கோபமடைந்தனர். இது ஷினவாத்துக்குப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. ஷினவாத்துடன் கூட்டணியில் இருந்த பும்ஜெய்தாய் கட்சி கூட்டணியிலிருந்து விலகுவதாகப் புதன்கிழமை (ஜூன் 18) அறிவித்தது. மேலும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அது கூறியது.பிரதமரின் நடவடிக்கை நாட்டைக் காயப்படுத்தியது, ராணுவத்தின் மரியாதையைச் சேதப்படுத்தியது என்று அக்கட்சி கூறியது. இதனால் ஷினவாத்தின் […]













