இலங்கையில்கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
இலங்கையில்கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் நடத்திய சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடுகள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளன, அவற்றில் 50 துப்பாக்கிச் சூடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை. மீதமுள்ள 18 துப்பாக்கிச் சூடுகள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டவை என்று […]













