ஐரோப்பா

இங்கிலாந்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இரத்து

கிராஸ்கன்ட்ரி நிறுவனம் நேற்று முதல் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான ரயில் சேவைகளை இரத்து செய்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கோளாறு காரணமாக முக்கிய மேலாண்மை அமைப்புகள் செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரயில் போக்குவரத்துக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் மற்றும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில்டர்ன் ரயில்வேஸ் Chiltern Railways மற்றும் எல்.என்.இ.ஆர் LNER உள்ளிட்ட மாற்று நிறுவனங்களால் ஞாயிற்றுக்கிழமை பயணச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன்,   அவை புதன்கிழமை வரை  செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தாமதமான பாதிக்கப்பட்ட பயணிகள், தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையைப் (Delay Repay) பெறத் தகுதியுடையவர்கள். அதே சமயம், பயணம் செய்ய வேண்டாம் என முடிவு செய்பவர்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்