EUவின் கொள்கை புறக்கணிப்பு – எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேம்படுத்த நோர்வே உறுதி
பேரண்ட்ஸ் கடலில் உள்ள தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை நோர்வே தொடர்ந்து மேம்படுத்தும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் டெர்ஜே ஆஸ்லாண்ட் Terje Aasland தெரிவித்துள்ளார்.
2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, நோர்வே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வழங்குநராக மாறியுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டின் எரிவாயு தேவையில் சுமார் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
கடந்த ஆண்டு, நாட்டின் எரிவாயு உற்பத்தி சாதனை அளவில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் எண்ணெய் உற்பத்தி 2009-க்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவை எட்டியது.
இருப்பினும், புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுத்தப்படாவிட்டால், 2030-க்குப் பிறகு உற்பத்தி கடுமையாகக் குறையும் என்று அதிகாரப்பூர்வ கணிப்புகள் காட்டுகின்றன.
இந்நிலையில் “இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலிலும், வளங்களின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டு, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேம்படுத்துவது ஐரோப்பிய நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று இன்று அறிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 2035 வரை பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஏறக்குறைய தற்போதைய அளவில் பராமரிப்பதை நார்வே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், பேரண்ட்ஸ் கடல் உற்பத்தி இதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் ஆஸ்லாண்ட் கூறினார்.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆர்க்டிக் பகுதியில் புதிய துளையிடுதலுக்குத் தடை விதிப்பதை ஆதரிக்கிறது.
ஆனால் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தனது கொள்கையை மறுபரிசீலனை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.




