கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் […]













