“மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்”: ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S.M. Marikar) மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து […]













