தான்சானியாவில்(Tanzanian) ஜனாதிபதி தேர்தல் எதிர்ப்பு போராட்டங்களில் 700 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு(Dundu Lisu) அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது […]













