ஐரோப்பா செய்தி

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி!

  • November 17, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களை விநியோகிப்பதற்கான தடையை ஜெர்மனி அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஆயுத விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் – ஹமாசிற்கும் இடையிலான போரின்போது சில ஆயுதங்கள் காசா மக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  விநியோகம் செய்வதை ஜெர்மனி நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இருநாட்டிற்கும்  இடையில்  போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து  இந்த முடிவு […]

இலங்கை

திருமலை சம்பவம்: இனவாதம், அரசியலுக்கு இடமில்லை! அரசு திட்டவட்டம்!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலை விவகாரத்தை வைத்து இனவாதம் மற்றும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கப்படாது. கடந்தகால சம்பவங்கள் இனி நடக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மதியம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு, “ புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படக்கூடும் என்பதாலேயே திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இரவு 10 மணியளவில் சம்பவம் நடந்ததால் உரிய பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியவில்லை. எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

உலகம்

எல்லைப் பிரச்சினை – வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா!

  • November 17, 2025
  • 0 Comments

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களை தீர்ப்பதற்கும் பகிரப்பட்ட எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவதற்கும் இராணுவ ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இராணுவ எல்லைக் கோட்டின் குறுக்கே வட கொரிய வீரர்கள் ஊடுறுவியதை தொடர்ந்து தென்கொரிய இராணுவ வீரர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். தென்கொரியாவின் மேற்படி குற்றச்சாட்டை வடகொரியா மறுக்கிறது. இந்நிலையிலேயே இராணுவ ரீதியான முறையான பேச்சுவார்த்தைகளுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது. எவ்வாறாயினும் இந்த முன்மொழிவை வடகொரியா ஏற்குமா என்பது கேள்விக்குறிதான் என அரசியல் […]

இலங்கை

திருகோணமலை பிரச்சினை: நாமலின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலை பிரச்சினையை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையை பாதுகாப்புக்காகவே அது வெளியில் எடுக்கப்பட்டது என பொதுமக்கள் […]

உலகம் செய்தி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) போர்க்குற்ற நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு  பாரிய போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை ஒடுக்குவதற்கு பலத்தை பயன்படுத்த ஹசீனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்விளைவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1400 பேர் உயிரிழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து அமைந்த இடைக்கால அரசாங்கம் சிறப்பு […]

இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது.  அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது.  அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை அறிக்கை […]

பொழுதுபோக்கு

சாச்சனா வீட்டில் சந்தோஷம்

  • November 17, 2025
  • 0 Comments

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலங்க்கு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாச்சனா. இதன் மூலம் பிரபலமான இவர் ஹார்ட் பீட் வெப் தொடரில் சிறப்பாக நடித்தார் இந்நிலையில், இப்போது சாச்சனா தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்

உலகம் செய்தி

யுனைடெட் ஏர்லைன்ஸ் ( United Airlines) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • November 17, 2025
  • 0 Comments

டல்லாஸிலிருந்து (Dallas) சிகாகோவுக்குச் (Chicago) பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் (Louis International Airport)  விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த விமானம் மிசோரியில் (Missouri) உள்ள லம்பேர்ட் செயிண்ட் லூயிஸ் (Lambert St. Louis) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது மனைவி கொண்டுவந்துள்ள பொதியில் வெடிக்கும் சாதனம் இருப்பதாகக் […]

இலங்கை செய்தி

எதிரணிகளின் பேரணி: இன்று வெளியான விசேட அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பேரணிக்குரிய ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை விடுத்தார். “ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை விரும்புபவர்கள் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்பார்கள். அதேபோல வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, இதனை […]

உலகம்

கரீபியன் கடலை வந்தடைந்த அமெரிக்காவின் விமானந்தாங்கி போர் கப்பல்!

  • November 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (Gerald R. Ford) விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும்  உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் பிரச்சனம் அப்பகுதியில் அதிகரித்து வருவதை புலப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) இன் ஒரு பகுதியாக  குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெனிசுலாவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை […]