இலங்கை முக்கிய செய்திகள்

செவ்வந்தி மூலம் அரசியல் தொடர்பு அம்பலம் – விசாரணை வேட்டை தீவிரம்!

  • November 18, 2025
  • 0 Comments

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பாதாள குழுவினருக்கு எதிரான […]

உலகம்

டிஜிட்டல் நிதிச் செயல்முறைக்கு புதிய கட்டுப்பாடுகள்! சிங்கப்பூரில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

டிஜிட்டல் நிதி நம்பகத்தன்மைக்கு புதிய விதிமுறைகள் அவசியம் எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற நிதித் தொழில்நுட்ப நிகழ்வின் இறுதி நாளில், இது தொடர்பான கோரிக்கையை நிதித் தொழில்நுட்பத் தலைவர்கள் விடுத்துள்ளனர். எதிர்கால டிஜிட்டல் நிதிச் செயல்முறை மீது மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொழில்நுட்பம், பணப்புழக்கத்தில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துவதால், இந்த விதிமுறைகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, […]

கருத்து & பகுப்பாய்வு

தொல்பொருள் திணைக்களமா? சிங்கள தொல்பொருள் திணைக்களமா?

  • November 18, 2025
  • 0 Comments

தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படுவதாக தொடர்ச்சியாக தமிழ் மக்களால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய இரண்டு வருட பதவிக்காலத்திற்கு தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம […]

உலகம் செய்தி

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளைப் பிரயோகித்து ஒடுக்கிய சமயம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 1600 பேர் வரை உயிரிழந்திருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களைத் […]

உலகம்

ட்ரம்பின் காசா சமாதானத் திட்டத்திற்கு ஐ.நா அங்கீகாரம் – ஹமாஸ் நிராகரிப்பு

  • November 18, 2025
  • 0 Comments

காசாவில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய 20 அம்சத் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ட்ரம்ப்பின் சமாதானத் திட்டத்தில் சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையொன்றை ஸ்தாபிக்கும் யோசனையும் உள்ளடங்கியுள்ளது. இதேவேளை, ஐ. நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது பலஸ்தீனர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் நிலைநாட்டவில்லை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகளின் வருகை அதிகரிப்பு – வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கை

  • November 18, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் பல நகரங்கள் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவிலிருந்து புகலிட விண்ணப்பங்கள் குறைந்துள்ள நிலையில், சூடானில் இருந்து அதிகமான மக்கள் ஐரோப்பாவிற்கு வருகிறார்கள். நிலைமை அவசரமாக மாறுவதற்கு முன்பு நகரங்களுக்குத் திட்டங்களும் வளங்களும் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அகதிகளுக்கு வெற்று அடுக்குமாடிக் குடியிருப்புகளை வைத்திருப்பது கடினம். குறிப்பாகப் பெரிய நகரங்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. ஆனால் அரசாங்கம் வீட்டுவசதிக்கான கொள்கலன்களை சேமித்து வைக்கலாம் என்பதோடு அவசரநிலைகளுக்கு என்று […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியிலுள்ள பிரபல ஏரி ஒன்றில் தங்க மீன்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • November 18, 2025
  • 0 Comments

இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ட்ரெண்டினோ பகுதியில் உள்ள லோப்பியோ ஏரியில் தங்க மீன்கள் (Goldfish) ஒக்சிஜனுக்காகப் போராடி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற நீர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான தங்கமீன்கள் ஒக்சிஜன் கிடைக்காமையால் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மோசமான சூழல் காரணமாக பெரும் தொகை மீன்கள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர்நிலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட தங்க மீன்களை, இந்த […]

கருத்து & பகுப்பாய்வு

சந்திரன் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு! பல மர்மங்களுக்கு விடை

  • November 18, 2025
  • 0 Comments

சந்திரனின் மேற்பரப்பில் ஒக்ஸிஜன் உள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான தாதுக்களைச் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒக்ஸிஜனேற்றம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் இரும்பு ஒக்ஸைடு தாதுக்களைக் கண்டுபிடித்தமையானது, சந்திரன் குறித்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விடயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சாங்’இ-6 (Chang’e-6) விண்கலம் மூலம் சேகரிக்கப்பட்ட, 3,000 மில்லிகிராம் எடை கொண்ட சந்திர மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்திர மாதிரிகளை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலம் பகுப்பாய்வு செய்தபோது, அவற்றில் ஹெமடைட் (Hematite), […]

இலங்கை

இலங்கையில் 6,700 இணையவழிக் குற்றங்கள் பதிவு – அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

  • November 18, 2025
  • 0 Comments

இலங்கையில் இணையவழிக் குற்றங்கள் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) அமைப்பு அறிவித்துள்ளது. இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 6,700 இற்கும் மேற்பட்ட இணையவழிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சேர்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது நாட்டில் இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பதிவான சம்பவங்களில் சுமார் 600 சம்பவங்கள் நேரடியாக இணைய துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி மோசடிகள் போன்றவற்றுடன் தொடர்புடையவை ஆகும். இந்தக் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவம்! ஐபோனை மறுசீரமைக்க அப்பிள் திட்டம்

  • November 18, 2025
  • 0 Comments

அப்பிள் (Apple) நிறுவனமானது தனது ஐ-போன் திறன்பேசியை (iPhone Smartphone) முற்றுமுழுதாக மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி இணையத்தளம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட ஐ-போன் திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்த இணையத்தளத்தின் தொழில்நுட்பச் செய்தியாளர் மார்க் கெர்மன் (Mark Kerman) தெரிவித்துள்ளார். அப்பிள் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் புதிய கருவிகளை அறிமுகம் செய்திருந்தது. எனினும், அப்பிளின் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence […]