இலங்கை

NPP அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள் – நாடு எங்கே செல்கிறது?

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் ஏற்பு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஜுலை மாதத்தில் 15 சதவீதம் சரிந்துள்ளது.

வெரிடே ரிசர்ச் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆய்வின்படி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 65 சதவீதமாக காணப்பட்டது.  இருப்பினும், 5 மாதங்களுக்குள், இந்த மதிப்பு 50% ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆய்வின்படி, ‘பொருளாதாரத்தின் எதிர்காலம்’ குறித்த பொதுமக்களின் கருத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது.

பொருளாதாரம் மீதான நம்பிக்கை  பிப்ரவரியில் 64% என்ற உச்சத்தில் இருந்த நிலையில் ஜூலைக்குள் 22% குறைந்து 42% ஆக உள்ளது.

இதற்கிடையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சிறப்பாக, நன்றாக அல்லது மோசமாக உள்ளதா என்பதை அளவிடும் ‘பொருளாதார நிலை’ என்ற பிரிவும்,  பெப்ரவரி ஒப்பிடும்போது 19% குறைந்துள்ளது.

மேலும், ‘நாட்டின் மீதான திருப்தி’, அதாவது, இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? இல்லையா? என்பது குறித்து கருத்துகோரப்பட்ட நிலையில், பொதுமக்களின் கருத்து, 38 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்