செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து

  • December 6, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

ஐரோப்பா செய்தி

இனி இந்த நாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது எனப் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

  • December 6, 2025
  • 0 Comments

ஃபைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான ஒரு கட்டுரையின்படி தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள இரண்டு நாடுகளின் பட்டபடிப்புக்கான விண்ணன்களை நிராகரிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள். ஒன்பது உயர்கல்வி நிறுவனங்கள்,, “நம்பகத்தன்மை” கொண்ட மாணவர்களை மட்டுமே சேர்ப்பதாகவும், “அதிக ஆபத்துள்ள” (high-risk) நாடுகளிலிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதை நிறுத்தியுள்ளன என்பதையும் உறுதியளித்துள்ள. பிரித்தானியாவில் சில பல்கலைக்கழகங்கள் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தான் மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக தெரிவிக்கின்றன. வோல்வஹாம்டன் பல்கலைக்கழகம் (University of Wolverhampton): இந்த நாட்டில் உள்ள […]

உலகம்

ஆப்பிரிக்காவின் தலைநகரில் பாரிய துப்பாக்கி சூடு –  11 பேர் பலி!

  • December 6, 2025
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று இடம் பெற்ற பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. உரிமம் இன்று இயங்கி வந்த பார் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று வயது குழந்தை 12 மற்றும் 16 வயதுடைய இரண்டு  சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவத்துடன் […]

இலங்கை

அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான  வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், கட்டமைப்புச் சேதம் இல்லாவிட்டாலும் சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் இந்த வழிகாட்டுதலின்படி, கொடுப்பனவைப் பெறத் […]

உலகம் செய்தி

மீண்டும் உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்: ரஷ்யா

  • December 6, 2025
  • 0 Comments

நேற்று இரவு ரஷ்யா, உக்ரைன் மீது 653 டிரோன்களையும் 51 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஏவுகணை தாக்குத்தலில் கீவ்வுக்கு வெளியே உள்ள ஃபாஸ்டிவ் (Fastiv) நகரில் ஒரு ரயில் நிலைய மையத்தில் விழுந்து வெடித்ததில் அதன் பிரதான நிலையக் கட்டிடத்தையும், ரயில் பெட்டிகளையும் (rolling stock) சேதப்படுத்தியது. மற்றும் சனிக்கிழமை அன்று உக்ரைன் எரிசக்தி அமைச்சகம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பேரிடர்: 213 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல் இல்லை!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் காணாமல்போனவர்களில் 213 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவரவில்லை. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (6) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கையாக 213 பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்து 309 வீடுகள் முழமையாகவும், 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 […]

இலங்கை

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!

  • December 6, 2025
  • 0 Comments

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி. வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “மட்டக்களப்புக்கு சென்றிருந்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மல்வத்து ஓயா நீர் நிலை தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே, அவரைதான் முதலில் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மல்வத்து ஓயா நீர் தொடர்பில் அவர் முரணான தகவலை […]

இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் ஏற்படப் போகும் மாற்றம்

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

இலங்கை

இலங்கையில் 611 பேரை பலி வாங்கியது டித்வா புயல்…

  • December 6, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்!

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் ஆயிரத்து 800 வீடுகள் முழமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 670 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.