உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் புதிய ராணுவத் தளபதி பலி!

காசாவிலுள்ள குடியிருப்பொன்றின்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவப் பிரிவுத் தளபதியான Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை, பல மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், Odehவுடன் சேர்த்து மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர் . மேலும் பலர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் தாக்குதலில் ராணுவத் தளபதி கொல்லப்பட்டிருந்த நிலையிலேயே அப்பதவிக்கு இவர் சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் காசா நகரின் மையப்பகுதியில் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கள அறிக்கைகள் கூறுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!